தாமதமாக வந்த தீயணைப்பு வீரர்கள்: தீயில் கருகிய 200 வாயில்லா ஜீவன்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸில் குடியிருப்புடன் இணைந்த தொழுவம் ஒன்று தீ பற்றி எரிந்ததில் மொத்தமாக 200 பன்றிகள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Appenzell மண்டலத்தில் உள்ள Hundwil கிராமத்திலேயே சனிக்கிழமை இரவு குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அந்த குடியிருப்பின் 85 வயதான உரிமையாளர் பொலிசாருக்கும் தீயணைப்பு குழுவினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

ஆனால் தீயணைப்பு குழு சம்பவப்பகுதிக்கு வந்து சேர்ந்தபோது, குறித்த குடியிருப்பானது மொத்தமாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன்,

Image: Appenzell Ausserrhoden Cantonal Police

அங்கிருந்த தொழுவத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 200 பன்றிகளும் உடல் கருகி பலியாகியுள்ளன. இச்சம்பவத்தில் அந்த 85 வயது உரிமையாளர் மட்டுமே உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தானது குறித்த நபருக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சுமா 100 அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கவும் அவருக்கு உதவும் சம்பவ இடத்தில் குவிந்ததாக தெரியவந்துள்ளது.

தீ விபத்து தொடர்பில் மாண்டல அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்