போதைப்பொருள் வாங்குவதற்காக சொந்த பாட்டியை கொடூரமாக அடித்து கொலை செய்த நபர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் வேண்டும் என்பதற்காக தன் சொந்த பாட்டியையே அடித்து கொலை செய்துள்ளார் அவரது பேரன்.

சுவிட்சர்லாந்தின் டிசினோவில், அந்த 24 வயது இளைஞர் போதைப்பொருள் வாங்குவதற்காக தனது பாட்டியிடம் 200 சுவிஸ் ஃப்ராங்குகள் கேட்டுள்ளார்.

பாட்டி பணம் கொடுக்க மறுக்கவே, சுத்தியலால் பாட்டியை பல முறை அடித்து கொடூரமாக கொலை செய்தார் அவர்.

அதன்பிறகு, அவர் உடனடியாக ஸ்பெயினிலுள்ள Ibiza தீவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அவர் ஏற்கனவே ஸ்பெயின் செல்வதற்காக பயணச்சீட்டும் வாங்கி வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவர் திட்டமிட்டே இந்த கொடூர செயலை செய்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்