சுவிட்சர்லாந்தில் காட்டுப்பகுதியில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: திட்டமிட்ட செயல் என வாதம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் 15 வயது சிறுவனை காட்டுப்பகுதிக்கு கூட்டிச் சென்று துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

பெர்ன் மண்டலத்தில் உள்ள Oberaargau பகுதியை சேர்ந்தவர் 50 வயதான அந்த புகைப்பட கலைஞர்.

இவர் கடந்த 2018 செப்டம்பர் மாதம் 15 வயதேயான சிறுவனை, புகைப்படம் எடுப்பதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் காட்டுக்குள் சென்ற பின்னர் சிறுவனை மரம் ஒன்றில் பிணைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

சிறுவன் வலியால் அலறிய பின்னரே அந்த நபர் சிறுவனை விடுவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, முன்னர் ஒருமுறை சிறுவனை தமது குடியிருப்புக்கு அழைத்த அவர், ஏணி ஒன்றில் பிணைத்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சிறுவனின் வயிற்றில் கடுமையாக தாக்கியுள்ளார். சிறுவன் அப்போதும் வலியால் அலறிய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளான்.

மேலும், அதை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம்.

குறித்த 50 வயது புகைப்பட கலைஞரின் குடியிருப்பில் இருந்து ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுடன் ஆறு ஹார்ட் டிரைவ்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

ஆனால் சிறுவன் தொடர்பில் பதிலளித்துள்ள குறித்த நபர், இருவரும் ஒப்புக்கொண்ட பின்னரே சீண்டலில் ஈடுபட்டதாகவும்,

புகைப்படங்களில் எந்த ஆபாசமும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கில் நிபந்தனையுடன் கூடிய 9 மாத சிறை தண்டனையும் அபராதமாக 10,800 பிராங்குகளும் அரசு தரப்பு கோரியுள்ளது. நாளை வெள்ளியன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்