இலங்கைக்கான சுவிஸ் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்: உண்மையா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இலங்கை தூதரக பெண் ஊழியர் ஒருவர் கொழும்புவில் கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் ஒரு பக்கம் இருக்க, அது தொடர்பான வதந்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அவற்றில் சமீபத்தில் வெளியான செய்தி, இலங்கைக்கான சுவிஸ் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுவிட்டதாக வெளியான தகவல் ஆகும்.

ஆனால், இலங்கைக்கான சுவிஸ் தூதர் சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தால் திரும்ப அழைக்கப்பட்டுவிட்டதாக வெளியான தகவல் உண்மையானது அல்ல என சுவிஸ் ஃபெடரல் வெளி விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில், சுவிஸ் ஃபெடரல் வெளி விவகாரங்கள் துறை, இலங்கைக்கான சுவிஸ் தூதரான H.E. Mr. Hanspeter Mock திரும்ப அழைக்கப்படவில்லை என்றும், வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுவிஸ் ஃபெடரல் வெளி விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சுவிஸ் தூதர், கொழும்புவில் தற்போது தனது பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்