பணிந்தார் சுவிஸ் தூதரக பெண் ஊழியர்?: இலங்கை மத்திய புலனாய்வுத் துறை முன்பு ஆஜரானதாக தகவல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இலங்கையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர், இலங்கை மத்திய புலனாய்வுத் துறை முன்பு ஆஜரானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்புவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கொடுத்த புகாரால் இரு நாடுகளுக்கும் இடையில் உரசல் உருவானது.

அவர் பொலிசார் முன் அறிக்கை அளிக்க வேண்டும் என்று பொலிசார் வற்புறுத்தி வந்தனர்.

அத்துடன் அறிக்கை அளிக்கும் முன் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடை செய்யும் உத்தரவு ஒன்றையும் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தற்போது அவர் இலங்கை மத்திய புலனாய்வுத் துறை முன்பு ஆஜராகி அறிக்கை ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பதாம் திகதிக்கு முன் அவர் இலங்கை மத்திய புலனாய்வுத் துறை முன்பு ஆஜராகவேண்டும் என்றும் அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது ஆஜராகி அறிக்கை ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்