ஜெனீவாவில் சாலையில் தடுக்கி விழுந்த பெண்மணிக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவாவில் ட்ராம் தண்டவாளத்தில் தடுக்கி விழுந்த ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை அந்த 75 வயது பெண்மணி, ட்ராம் தண்டவாளத்தில் தடுக்கி விழ, சரியாக அந்த நேரத்தில் ஒரு ட்ராம் வந்துள்ளது.

அவர் மீது ட்ராம் மோத, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இதனால், ட்ராம் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும், இதுவரை ஜெனீவாவில் சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...