கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு... மனைவியின் அதிர்ச்சி முடிவு: நீதிமன்றத்தில் அம்பலமான் உண்மை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
450Shares

சுவிட்சர்லாந்தில் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஆத்திரத்தில் மனைவி கத்தியால் குத்திய வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.

சுவிஸில் Grisons மண்டலத்தில் கடந்த 2018 ஆகஸ்டு மாதம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறிப்பிட்ட தம்பதி குடும்ப விழா ஒன்றில் சம்பவத்தன்று கலந்து கொண்டுள்ளனர். விழாவில் மனைவி குறிப்பிட்ட ஒரு வார்த்தையால் மனமுடைந்த கணவன் தமது குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

விழா முடிந்து தாமதமாக திரும்பிய மனைவி சமையலறையில் எதையோ கத்தியால் நறுக்கியபடி இருந்துள்ளார்.

அப்போது சமையலறையில் நுழைந்த கணவன், தமது மனைவியை பின்னால் இருந்து அணைத்துள்ளார்.

இந்த நிலையில் கத்தியுடன் திரும்பிய மனைவியிடம் என்னை வெட்டி விட்டுவிடுவாயா என கேட்டுள்ளார்.

அதே வேளையில் 59 வயதான அந்த பெண்மணி, 21 அங்குல கத்தியை கணவனின் மார்பில் குத்தியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் சரிந்த கணவனை அவரே மருத்துவமனையிலும் சேர்ப்பித்துள்ளார். தீவிர சிகிச்சையின் முடிவில் அவர் உயிர் தப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அரசு தரப்பு, தமது கணவரை கொலை செய்யும் நோக்குடனே கத்தியால் தாக்கியதாக நிரூபித்தது.

மேலும் அந்த 59 வயது பெண்மணிக்கு 4 ஆண்டுகளும் 4 மாத சிறை தண்டனை விதிக்கவும் கோரியது.

ஆனால் நீதிமன்றத்தில், அந்த நபரே தன்னைத் தானே கத்தியால் தாக்கியது அம்பலமானது. மட்டுமின்றி, மனைவி தம்மை விட்டு பிரிந்து செல்வதாக மிரட்டியதாலையே தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

கத்தியில் டி.என்.ஏ தடயங்கள் இல்லை என்பது மட்டுமின்றி அந்த 59 வயது பெண்மணி தாக்குதலில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் மனைவி மீதான குற்றவியல் புகாரை தாம் திரும்ப பெறுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இரத்தக்களரியில் முடிந்த தகராறு இருந்தபோதிலும், குறித்த தம்பதி இன்னும் ஒருவருக்கொருவர் நேசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்