சுவிஸில் தனியாக குடியிருந்த பெண்மணி... திட்டமிட்ட இளைஞர்: நடுங்க வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
641Shares

சுவிட்சர்லாந்தில் தனியாக குடியிருந்த பெண்மணி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆராவ் பகுதியில் தனியாக குடியிருந்து வந்தவர் 66 வயதான ஹில்டெகார்ட் என்ஸ் ரிவோலா.

இவரே கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தமது குடியிருப்புக்கு முன்பு கத்திக் குத்து காயங்களுடன் குற்றுயிராக மீட்கபட்டவர்.

தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரிவோலா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.

அவரது உடல் முழுவதும் 51 முறை கத்தியால் குத்தப்பட்டதன் ஆழமான காயங்கள் இருந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்பகுதியை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக ரிவோலாவின் புகைப்படத்துடன் விளம்பரம் மேற்கொண்ட பொலிசார், பொதுமக்களின் உதவியை நாடினர்.

ஆனால் முதற்கட்டத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சில வாரங்களுக்கு பிறகு,

பொலிசாருக்கு அதே பகுதியில் உள்ள 28 வயது இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவரை கண்காணித்த பொலிசார், அவரது குடியிருப்பையும் சோதனை செய்துள்ளனர். இதில், ரிவோலாவை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை பொலிசார் கைப்பற்றினர்.

இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்த பொலிசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலையின் பின்னணி அம்பலமானது.

அந்த இளைஞர் தங்கியிருந்த ஒற்றை அறையில் இன்னும் ஒரே ஒரு மாதம் மட்டுமே தங்கியிருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதாகவும்,

அதனால், தனியாக தங்கியிருந்த ரிவோலாவை கொலை செய்துவிட்டு, அவரது குடியிருப்பில் குடியேற திட்டமிட்டதாகவும், அந்த இளைஞர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த அறிமுகமோ விரோதமோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, மது மற்றும் போதை மருந்துக்கு அடிமையான அந்த இளைஞர், சம்பவத்திற்கு முன்னரும், பிறகும் மதுவும் போதை மருந்தும் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞரை பிணையில் விடுவித்தால், இதுபோன்ற வன்முறையில் ஈடும் சாத்தியம் அதிகம் என்பதால் விசாரணை கைதியாக சிறையில் அடைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்