விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல..! தமிழர்களை விடுதலை செய்தது சுவிஸ்

Report Print Basu in சுவிற்சர்லாந்து
247Shares

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிஸ் பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தால் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்துள்ளது.

1999 மற்றும் 2009க்கு இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டுவதன் மூலம் சுவிஸ் தண்டனைச் சட்டத்தை மீறியதாக சுவிஸ் வாழ் தமிழர்கள் 12 பேர் மீது அட்டர்னி ஜெனரல் அலுவலகம் குற்றம் சாட்டியது.

9 ஆண்டு விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிதி ரீதியாக உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவை ஆதரித்ததாக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் சந்தேகித்தது.

ஆனால், 2018 ஜூன் மாதம் பெடரல் குற்றவியல் நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை போதுமான அளவில் நிறுவ முடியவில்லை என்பதைக் கண்டறிந்தது.

மேலும், புலிகள் குற்றவியல் குழுவாக கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் மாதம் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மேல்முறையீடு செய்தது, குற்றம் சாட்டப்பட்டவர்க்ள குற்றவியல் குழுவை ஆதரித்ததாக வலியுறுத்தினார்.

நவம்பர் 3ம் திகதி செவ்வாயன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில், சவிஸ் பெடரல் நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை உறுதிசெய்தது.

சுவிஸ் தண்டனைச் சட்டத்தின் 260வது பிரிவு மாஃபியா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

அப்போதிருந்து இது அல்-கொய்தா அல்லது ஐ.எஸ் பயங்கரவாத போராளிகள் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்டது.

நிதி திரட்டிய நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என்று பெடரல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு பணம் வாங்கியவர்கள், பின்னர் சட்டத்தை மீறியவார்கள் என்று கருத முடியாது.

பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், புலிகளின் முதன்மை நோக்கம் சுயாதீன இன சமூகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தான் என சவிஸ் பெடரல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்