சுவிஸில் 5 வயது சிறுமிக்கு பெற்றோரால் ஏற்பட்ட துயரம்... மன்னிப்பு கோரிய தாயார்: அடம்பிடிக்கும் தந்தை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
513Shares

சுவிட்சர்லாந்தின் St. Gallen நகரில் 5 வயது சிறுமியை அந்தரங்கம் தொடர்பான பயிற்சிக்கு உட்படுத்திய விவகாரத்தில் அதன் தாயார் நீதிமன்றத்தில் கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமது மகளிடம் தாம் மேற்கொண்ட செயல் அருவருப்பானது, அதில் வெட்கப்படுகிறேன் என அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

5 வயது சிறுமிக்கு தாயாரான சாரா என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜேர்மன் நாட்டவர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதில், அந்த நபருக்கு பாலியல் அடிமையாக இருக்க தாம் ஒப்புக்கொண்டதுடன், நாளடைவில் தமது மகளையும் அதே நிலையில் பயிற்சி அளிக்க அந்த ஜேர்மானியரின் கட்டாயத்திற்கு சாரா கட்டுப்பட்டுள்ளார்.

இதனால் பிஞ்சு குழந்தையை பாலியல் தொடர்பான காணொளிகளை பார்க்க வைத்ததுடன், தாயாருடன் உறவில் ஈடுபடுத்தவும் அந்த ஜேர்மானியர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமிக்கு அளித்த பயிற்சியை தாம் சோதிக்க வேண்டும் என கூறிய அந்த ஜேர்மானியர், அதற்கு நாளும் குறித்துள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அதற்கு முந்தைய நாள் அந்த ஜேர்மானியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2018 மார்ச் மாதம் St. Gallen மாவட்ட நீதிமன்றம் சாராவுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஜேர்மானியர் தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், சாரா உடன் மட்டுமே தாம் உறவு வைத்துக் கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், சிறப்பு பாடசாலைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது 8 வயதாகும் அந்த குழந்தை, பாலியல் தொடர்பான கருத்துக்களை மட்டுமே பேசி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்