கருப்பு வெள்ளி பெயரில் மோசடி: எச்சரிக்கையாக இருக்க கோரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கருப்பு வெள்ளிக்கிழமை என்ற பெயரில் நடக்கும் மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Thanksgiving நாளுக்கு மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஷாப்பிங் தொடங்குவதை பாரம்பரியமாக கருப்பு வெள்ளிக்கிழமை என அமெரிக்கர்கள் கொண்டாடுவதுண்டு. ஆனால் இணையம் வாயிலாக உலகம் முழுவதையும் இது பரவியபின், பல்வேறு நாடுகளும் அதை தற்போது பின்பற்றி வருகின்றன.

சுவிட்சர்லாந்திலும் கருப்பு வெள்ளியை ஒட்டி, சுமார் அரை மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கும் இந்த விற்பனைக்காக பல வாடிக்கையாளர்கள் பணத்துடன் காத்திருந்ததாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விடயத்தில் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

அதாவது, பிரபல சுவிஸ் பத்திரிகை ஒன்று மேற்கொண்ட ஒரு ஆய்வில், சில பொருட்கள் நீண்ட காலமாகவே தள்ளுபடி விலையில் கிடைப்பதாகவும், கருப்பு வெள்ளி தள்ளுபடி என்பது உண்மையில் பார்த்தால் சில ஃப்ராங்குகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல், சில பொருட்கள் 70 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைப்பதாக விளம்பரம் செய்யப்படுகின்றன.

ஆனால் உண்மையில் யாருமே அப்படி ஒரு தள்ளுபடியைக் கொடுக்கமுடியாது என்கிறது அந்த ஆய்வு.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்