இலங்கைக்கு சுவிஸ் கடும் கண்டனம்..! விஸ்வரூபம் எடுத்தது கொழும்பில் தூதரக ஊழியர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

கொழும்பில் உள்ளுர் தூதரக ஊழியர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டது தொடர்பில் சுவிட்சர்லாந்து, இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி விசாரணை கோரியுள்ளது

அடையாளம் தெரியாத ஆண்கள் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிட சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணை கட்டாயப்படுத்த முயன்றதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் குறித்த உத்தியோகபூர்வ விசாரணையில் ஈடுபட்டிருந்த உயர் பொலிஸ் அதகிாரி நிஷாந்தா டி சில்வா சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியதாகக் கூறப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.,

தற்போது இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை அடுத்து, தனது பாதுகாப்பிற்கு அஞ்சி நிஷாந்தா டி சில்வா சுவிஸ் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுவிஸ் தூதரகத்தில் உள்ள இலங்கை ஊழியர் அவரது விருப்பத்திற்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டு நீண்ட நேரம் அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது அதன் இராஜதந்திர பிரதிநிதித்துவங்களில் மற்றும் அதன் ஊழியர்கள் மீது மிகவும் கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலில் ஒன்று என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை சுவிட்சர்லாந்து இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குற்றவாளிகள் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கொழும்பில் சுவிஸ் பிரதிநிதித்துவத்தின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் மற்றும் அதன் ஊழியர்கள் முழுமையாக மீட்கப்பட வேண்டும் என்றும் சுவிஸ் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான சுவிஸ் தூதர் இச்செய்தியை நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், காவல்துறை அதிகாரி நிஷாந்தா டி சில்வாவின் புகலிடம் குறித்து சுவிஸ் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்