சுவிஸில் 80 மிதிவண்டிகளைத் திருடி தலைமறைவான நபர்: பொலிசாரிடம் தெரிவித்த பகீர் காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் 80 மிதிவண்டிகளைத் திருடி போதை மருந்து வாங்கிய சம்பவத்தில் நபர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லூசெர்ன் நகரில் கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தமது போதை மருந்து தேவைகளுக்காக 80 மிதிவண்டிகளைத் திருடி விற்றுள்ளார்.

திருடப்பட்ட மொத்த மிதிவண்டிகளின் மதிப்பு சுமார் CHF 96,000 என தெரியவந்துள்ளது. ஆனால் அந்த நபர் வெறும் 10,000 பிராங்குகளுக்கே அந்த மிதிவண்டிகளை விற்றுள்ளார்.

இவரிடம் இருந்து மிதிவண்டிகளை வாங்கிய நபர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2014 ஆண்டு பொலிசார் இவரை கைது செய்ய முயன்ற நிலையில், அவர் வெளிநாடுகளுக்கு தப்பியதாக தெரியவந்தது.

தொடர்ந்து அவர் சர்வதேச தேடலுக்காக சுவிஸ் பொலிசாரால் விளம்பரம் செய்யப்பட்டார். இதனையடுத்து 3 ஆண்டுகளுக்கு பின்னர், 2017 ஆம் ஆண்டு சுவிஸ் எல்லையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

பொலிஸ் விசாரணையில், தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் மருத்துவ ஆலோசனைக்கும் கோரினார்.

தற்போது லூசெர்ன் குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், போதை மருந்து தொடர்பான சிகிச்சையில் உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், நீதிமன்ற செலவீனங்கள் 800 பிராங்குகளும், அபராதமாக 500 பிராங்குகளும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்