12 வயது சிறுமி மற்றும் தாயாரை வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றிய சுவிஸ்: வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அகதிகளாக தங்கியிருந்த இரு செச்சினியா நாட்டவர்களை வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றிய சம்பவத்தில் எதிர்ப்பு வலுத்துவருகிறது.

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் அகதிகளாக தங்கியிருந்த செச்சினியா நாட்டவர்களான 12 வயதான டானா மற்றும் அவரது தாயார் லூயிசா(53) ஆகிய இருவரையும் சுவிஸ் அதிகாரிகள் பெல்ஜியம் நாட்டிற்கு வெளியேற்றியுள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

கத்தோலிக்க தேவாலய நிர்வாகத்தினர் மேற்கொண்ட ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சுமார் 4,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுபோன்ற ஒரு நிலை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என லூசெர்ன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Picture: jab

லூசெர்ன் நிர்வாகம் அந்த குடும்பத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதில் மிகவும் ஏமாற்றமடைவதாக கத்தோலிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின்போது 12 வயதேயான சிறுமி டானா பாடசாலையில் இருந்ததாகவும், மொத்த சிறார்களின் மத்தின் ஒரு குற்றவாளியை போன்று பொலிசார் நடத்தியுள்ளது உண்மையில் கண்டிக்கத்தக்க செயல் என பலரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பெல்ஜியத்தில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள டானா மற்றும் லூயிசா ஆகிய இருவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக லூசெர்ன் கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Picture: jab

எதிர்வரும் சில தினங்களில் பெல்ஜியம் சென்று கடிதம் மற்றும் பரிசுப்பொருட்களை அவர்களுக்கு அளிக்க இருப்பதாக கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் லூயிசாவுக்கு வாரத்திற்கு 7 பிராங்குகளும் டானா மூன்றரை பிராங்குகளும் உதவித் தொகையாக தற்போது பெற்றுவருவதாக லூசெர்ன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்