தெருவிலிருந்த தொலைக்காட்சி கடையில் திடீரென தோன்றிய ஆபாச படம்: தலை கவிழ்ந்த பெண்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சில் கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட தொலைக்காட்சி பெட்டியில் திடீரென ஆபாச படம் ஒன்று ஓட ஆரம்பித்தது.

நேற்று காலை Oerlikon பகுதியிலிருந்த தொலைக்காட்சி பெட்டி கடை ஒன்றின் அருகே நடந்துகொண்டிருந்த மக்கள், திடீரென கடையில் டிஸ்பிளேக்காக வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட தொலைக்காட்சி பெட்டியில் ஆபாச படம் ஒன்று ஓடுவதைக் கண்டு வியப்படைந்தனர்.

ஆண்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தவாறே அங்கிருந்து நகர, பெண்கள் வெட்கத்தில் தலைகுனிந்தவாறே ஓட்டம் பிடித்தனர்.

சிலர் கடையில் சென்று தகவல் கூற, அதிர்ந்துபோன கடைக்காரர் அந்த தொலைக்காட்சி பெட்டியின் மின் இணைப்பை துண்டித்தார்.

யாரோ ஒருவர் வேடிக்கைக்காக இந்த தொலைக்காட்சி பெட்டிக்கு பொருந்தும் ரிமோட் ஒன்றை வைத்து, தெருவிலிருந்து ஆபாச சேனலை மாற்றியிருக்கவேண்டும் என கருதப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்