தென் ஆப்பிரிக்காவில் சுவிஸ் பிரஜை மரணம்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து

தென் ஆப்பிரிக்காவின் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த விபத்தில் சுவிஸ் நாட்டவர் பலியாகியுள்ளனர்.

உலகளவில் பெரிய வனவிலங்கு சரணாலயங்களில் Kruger National Parkயும் ஒன்று, 2018- 2019ம் ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.

கடந்த 10 திகதி 13 பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது, Mopani என்ற பகுதியில் ஒட்டகச்சிவங்கி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலை தடுமாறிய ஒட்டகச்சிவிங்கி வந்து கொண்டிருந்த காரின் மீது விழுந்ததில், காரை ஓட்டி வந்த சுவிஸ் பிரஜைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்த நிலையில், இரண்டு நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து உடனடியாக ஹெலிகொப்டர் மீது சுவிஸ் பிரஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ள நிர்வாகம், சரணாலயத்தின் சாலைகளில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்