11 ஆண்டுகளுக்குப்பின் ஐரோப்பாவுக்கு திரும்பிய குற்றவாளி: காத்திருந்து கைது செய்த பொலிசார்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொலை மற்றும் கொள்ளை ஒன்றில் தொடர்புடைய ஒரு குற்றவாளி, 11 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த நாடான பிரேசிலுக்கு தப்பிவிட்டார்.

ஜெனீவா நீதிமன்றம் ஒன்று அவருக்கு சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையில், தலைமறைவானார் அவர்.

அதுதான் 11 ஆண்டுகள் ஆகிவிட்டதே, நம்மை யார் நினைவில் வைத்திருப்பார் என்ற தைரியத்தில், சென்ற வார இறுதியில் இத்தாலியிலிருக்கும் தனது குடும்பத்தைக் காண வந்துள்ளார் அவர்.

உடனடியாக தயாராக இருந்த பொலிசார் சர்வதேச வாரண்ட் ஒன்று அவர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்ததையடுத்து, அவரை மிலன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.

தன்னை பொலிசார் மறந்திருப்பார்கள் என்று அவர் நினைத்திருக்கிறார், ஆனால் ஜெனீவா பொலிசார் அவரை மறக்கவில்லை. அவரை சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்