அடுத்த சில நாட்களில் சுவிட்சர்லாந்தை பெரிய பூகம்பம் ஒன்று தாக்கலாம்: நேற்று மீண்டும் ஒரு நில அதிர்வு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
492Shares

சுவிட்சர்லாந்தை அடுத்த சில நாட்களில் பெரிய பூகம்பம் ஒன்று தாக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலாயிஸ் மாகாணத்தை சிறு நில அதிர்வுகள் தாக்குவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று மாலையும் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகிய ஒரு பூகம்பம் வலாயிஸ் மாகாணத்தை தாக்கியது.

செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து 140 சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. பூகம்பவியல் ஆய்வாளர்கள் இது மிக அசாதாரண நிகழ்வு என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இதுபோல் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் அவர்கள். பூகம்பம் வருவதைக் கணிப்பது மிக மிகக் கடினம் என்று கூறியுள்ள பூகம்பவியல் ஆய்வாளர்கள், ஆனால் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று ஏற்படும் வாய்ப்பு சிறிய அளவில் உள்ளதாக கணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்