நான்கு வயது குழந்தையின் பெண்ணுறுப்பில் மரக்கரண்டியால் அடித்து காயப்படுத்திய தாய் கைது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் நான்கு வயது குழந்தை ஒன்று பிறப்புறுப்பில் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் தாய் அவளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு செய்ததாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர் 132 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

ஆனால் தொடர்ந்து வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், நீதிமன்றம் அவர் பெண்ணுறுப்பு சிதைப்பு செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

தற்போது சுவிட்சர்லாந்தின் Bellinzona என்ற இடத்தில் அந்த பெண் போர்ச்சுக்கீசியர் என்றும், அந்த நாட்டில் பெண்ணுறுப்பு சிதைப்பு கலாச்சாரம் இல்லை என்றும் கூறி அவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆனால், அந்த பெண் தனது குழந்தையை பல சமயங்களில் கரண்டியால் அடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே, இம்முறையும் அவர் அந்த குழந்தையை மரக்கரண்டியால் அடித்ததாலேயே அவளுக்கு பெண்ணுறுப்பில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நம்புவதாகத் தெரிவித்துள்ள நீதிமன்றம், அந்த குழந்தையின் தாய்க்கு 20 மாதங்கள் சிறைத்தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அந்த 35 வயது பெண், மனவியல் சிகிச்சைக்குட்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்