பெற்றோர் கண் முன்னே ரயிலில் சிக்கி மரணமடைந்த இளைஞர்.... அதன் பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெற்றோர் கண் முன்னே இளைஞர் ஒருவர் ரயிலில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனின் திடீர் மறைவை தாங்க முடியாமல் அவதிப்பட்டுவந்த அவரது தந்தை 5 நாட்களுக்கு பின்னர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

சூரிச்-ஓயர்லிகோன் பகுதியில் அமைந்துள்ள புகலிட கோரிக்கையாளர்களின் குடியிருப்புகளை பார்வையிட தங்களது 20 வயது மகணுடன் தம்பதி ஒன்று கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி சென்றுள்ளது.

குறித்த புகலிட கோரிக்கையாளர்கள் மையம் அருகே ரயில் தண்டவாளமும் அமைந்துள்ளது.

ஆனால் எவ்வித காரணங்களும் இன்றி ஆட்டிசம் மற்றும் வலிப்பு நோயால் பாதிப்புக்கு உள்ளான அந்த 20 வயது இளைஞர் ரயில் தண்டவாளத்தின் அருகே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெற்றோரின் கண் முன்னே அந்த இளைஞர் ரயிலில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தை அவரது குடும்பம் மட்டுமின்றி சில புகலிட கோரிக்கையாளர்களும் நேரிடையாக பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இச்சம்பவம் நடந்து சுமார் 5 நாட்களுக்கு பின்னர், அந்த இளைஞரின் தந்தையும் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோய்வாய்ப்பட்டுள்ள தமது மகனின் திடீர் மறைவில் இருந்து மீளமுடியாமல் தவித்து வந்த அந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை 3 மணியளவில் Kosovo நாட்டில் உள்ள தங்களது சொந்த கிராமத்தில் இருவரது சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக நண்பர்களும் உறவினர்களும் இணைந்து சுமார் 10,000 பிராங்குகள் சேகரித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்