சுவிட்சர்லாந்தில் பெண் மருத்துவர் உள்ளிட்ட மூவர் கைது: மருத்துவ கருவிகள் பறிமுதல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
354Shares

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் சட்டவிரோதமாக மருத்துவ சேவையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண் உள்ளிட்ட மூவரை மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களது குடியிருப்பில் இருந்து மருத்துவ கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் மண்டல பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சூரிச் மண்டலத்தில் Adlikon பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வெள்ளியன்று பகல் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பொலிசார்,

பெண் மருத்துவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர். கைதான மூவரும் செர்பியா நாட்டவர்கள் எனவும், 41 முதல் 53 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் சூரிச் பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.

கைதான மூவரும் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் இருவர் குறித்த பெண் மருத்துவருக்கு உதவியாளராக செயல்பட்டு வந்துள்ளனர். பெரும்பாலும் முக வடிவு மற்றும் உதடு தொடர்பான சிகிச்சைகளை இந்த மூவரும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்த மூவரும், மருத்துவ சேவையில் ஈடுபடுவதற்கான எந்த ஆவணங்களும் வைத்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் பயன்படுத்தி வந்த கருவிகளும் சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டவை என தெரியவந்துள்ளது.

தற்போது அவர்களிடம் எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற எண்ணிக்கையை பொலிசார் வெளிவிட மறுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்