சுவிஸில் வெளிநாட்டு பெண்மணி மரணத்தில் மர்மம்: காதலரை கைது செய்த பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
487Shares

சுவிட்சர்லாந்தின் Friborg மண்டலத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பெண்மணி விவகாரத்தில் அவரது காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டவரான குறித்த 41 வயது பெண்மணி சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னரே சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.

கடந்த ஜூலை முதல் 52 வயது சுவிஸ் நாட்டவருடன் உறவுமுறையில் இருந்து வந்துள்ளார். தற்போது சந்தேகத்தின் பேரில் இவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 14 ஆம் திகதி இரவு குறித்த பெண்மணி சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாக கூறி மருத்துவ உதவிக் குழுவினருக்கு உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளார் கைதான சுவிஸ் நாட்டவர்.

ஆனால் மருத்துவ குழுவினர் முயன்றும் அவர்களால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

மரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், அது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரேசிலில் உள்ள குடும்பத்தாருக்கு செவ்வாய்க்கிழமை வரை இவரது மரணம் தெரியாது எனவும், தற்போது சடலத்தை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த தகவலில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்