என் குழந்தைக்கு உணவில்லை, உதவுங்கள்: சமூக ஊடகத்தில் உதவி கோரிய சுவிஸ் தாய்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
204Shares

ஒரு கப் சுவையூட்டப்பட்ட தயிரைத்தவிர எங்கள் குளிர்பதனப்பெட்டியில் வேறு எதுவும் இல்லை, இன்றும் என் மகனுக்கு ஒரு துண்டு ரொட்டியைக் கொடுத்துதான் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறேன் என்று கூறும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் சமூக ஊடகத்தில் உதவி கோரியிருக்கிறார்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயான தன் பெயரை வெளியிட விரும்பாத, SG என்று தன்னைக் குறிப்பிடும் அந்த பெண், தான் கடந்த வெள்ளிக்கிழமை சாப்பிட்டது, அதற்குப்பிறகு எதுவும் சாப்பிடவில்லை என்கிறார். பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார் SG.

இம்மாத துவக்கத்தில், அவரது கணவன் அவரை அடித்ததால் காயம் ஏற்பட்டதையடுத்து அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில், வீட்டில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துச் சென்றுவிட்டார் அவரது கணவர்.

வந்த வருமானம் முழுவதையும், சமீபத்தில் மாதாந்திர கட்டணங்களை செலுத்த பயன்படுத்திவிட்டதால், கையில் வேறு பணம் எதுவும் இல்லை.

ஒன்றரை வாரங்களாக குளிர்பதனப்பெட்டியில் மிச்சம் மீதி இருந்தவற்றை உண்டுதான் பிள்ளைகள் நாட்களை கடத்தியிருக்கிறார்கள்.

அதுவும் முழு உணவெல்லாம் இல்லை, தயிர், சிறிது ரொட்டி மற்றும் சிறிது சிப்ஸ் அவ்வளவுதான்.

ஆனால் வெள்ளிக்கிழமையோடு எல்லாம் தீந்துவிட்டது. பிள்ளைகள் பசியுடன் குளிர்பதனப்பெட்டியை திறந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்வதைப் பார்க்க மனது வலிக்கிறது என்கிறார் SG.

அதனால்தான் வேறு வழியின்றி சமூக ஊடகத்தில் உதவி கோரியிருந்தார் அவர். இதற்கிடையில் உதவி கோரிய SGக்கு முதல் பதில் வந்திருக்கிறது.

ஒரு பெண் பார்சலில் கொஞ்சம் உணவு அனுப்பியிருப்பதாக SGக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மகிழ்ச்சிதான், என்றாலும், எப்போதுமே மற்றவர்களிடமிருந்து உணவு பெற்று பிள்ளைகளுக்கு கொடுக்க SG விரும்பவில்லை. அரசிடம் அவர் உதவி கோரியிருக்கும் நிலையில், அது வந்து சேரும்வரையில்தான் இந்த உதவியை எதிர்பார்க்கிறார் SG, அவ்வளவுதான்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்