இனி சுவிட்சர்லாந்தில் பயணம் செய்யும் முன் பயணச்சீட்டு வாங்கவேண்டாம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
479Shares

சுவிட்சர்லாந்தில் இனி பயணம் செய்யும் முன் பயணச்சீட்டு வாங்கவேண்டாம், அந்த நாளின் இறுதியில் அந்த தொகையை செலுத்தினால் போதும்.

கையில் பணம் இல்லாவிட்டாலும் சரி, பயணத்தின் நடுவே திடீரென புதியதாக ஒரு இடத்திற்கு போக திட்டமிட்டாலும் சரி, இனி அதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை. இந்த ‘post price ticketing’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்யும் முதல் நாடு என்ற பெருமை சுவிட்சர்லாந்துக்கு கிடைக்க இருக்கிறது.

2020முதல் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக 20 minutes என்னும் சுவிஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ள நிலையில், எந்த மாதத்திலிருந்து என்பது குறிப்பிடப்படவில்லை.

இனி பயணிகள் பயணம் செய்வதற்கு முன் பயணச்சீட்டை வாங்குவதற்கு பதிலாக, தங்கள் ஸ்மார்ட்போனில் தங்கள் பயணத்திட்டத்தை கொடுத்துவிட்டால் போதும். எந்த இடத்துக்கு போக வேண்டுமோ அங்கு சென்றதும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டோம் என்பதை பதிவு செய்துவிடவேண்டும்.

அப்படி செய்ய நாம் மறந்துவிட்டாலும், நாம் தேர்வு செய்துள்ள ஆப் (App), அதை நமக்கு நினைவூட்டும்.

அந்த நாளின் இறுதியில், நீங்கள் பயணம் செய்ததற்கான மொத்த கட்டணத்தை கணக்கிட்டு, உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

2018இல் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தை இதுவரை சுவிட்சர்லாந்தில் சுமார் 90,000 பேர் தற்போது பயன்படுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கும் நடைமுறையும் பயன்பாட்டில்தான் இருக்கும் என்பதால், ஸ்மார்ட்போன் இல்லாதவர்களோ, கணினி பயன்பாட்டுக்கு தயங்குபவர்களோகூட கவலைப்பட தேவையில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்