சுவிஸில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: ஒரு வாரத்திற்கு பின்னர் அம்பலமான பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 62 வயது பெண்மணி தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

சூரிச் நகரில் கடந்த 12 ஆம் திகதி குடியிருப்பு ஒன்றில் இருந்து கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் 62 வயது பெண்மணி ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.

அந்த குடியிருப்பில் குறித்த பெண்மணி வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது 24 வயது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே 62 வயது பெண்மணியை சடலமாக பொலிசார் மீட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 36 வயது பெண்மணி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த தகவலை சூரிச் மண்டல பொலிசார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். பொலிஸ் தரப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கொல்லப்பட்ட 62 வயது பெண்மணியும் கைதான பெண்மணியும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் எனவும், கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தியே கொலை நடந்துள்ளதாகவும் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த கொலை சம்பவத்தின் தன்மை கருதி வேறு தகவல்களை வெளியிட முடியாது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட 62 வயது பெண்மணியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்