சுவிட்சர்லாந்து உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள கொரில்லா: குட்டிக்கு பெயர் வைப்பதில் ஒரு சிக்கல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பேஸலில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள கொரில்லா குட்டிக்கு பெயர் வைப்பதில் ஒரு விநோத காரணம் காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பேஸல் உயிரியல் பூங்காவில் இருக்கும் Faddama என்ற கொரில்லா, குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

இந்நிலையில் அந்த கொரில்லா குட்டிக்கு பெயர் வைப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அது வேறொன்றுமில்லை, Faddama தனது குட்டியை கீழேயே விடாமல், தனது மார்போடேயே அணைத்துக் கொண்டே இருக்கிறது.

அந்த குட்டி ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்தால்தான் அதற்கு பெய்ரிட முடியும். அப்படியிருக்கும்போது Faddama தனது குட்டியை மறைத்தே வைத்திருப்பதால் அது ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிய முடியாததால் அதற்கு பெயரிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரில்லா குட்டிகள் இரண்டு வயது வரை கூட அம்மாவுடனேயேதான் இருக்கும். அதற்கு பிறகுதான் தாய் கொரில்லா குட்டிகளை தனியே விடும்.

அதைத் தொடர்ந்து இரண்டு வருடங்களும் கூட கொரில்லாக்கள் குட்டிக்கு பாலூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்