சுவிஸில் வெளிநாட்டு இளைஞருக்கு நிர்வாண சித்திரவதை: வெளியாகும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் பொலிஸ் விசாரணையில் சிக்கிய வெளிநாட்டு இளைஞர் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் குடியிருந்து வந்த குர்து இனத்தை சேர்ந்த நான்கு துருக்கிய இளைஞர்கள் கடந்த மே மாதம் பெர்ன் மண்டல பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் துருக்கியில் இருந்து அடைக்கலம் கோரி வந்த இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக வழக்குப் பதியப்பட்டது.

ஆனால் தாக்குதலுக்கு இரையான துருக்கிய இளைஞர், சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் துருக்கிய நாட்டவர்கள் தொடர்பில் வேவு பார்ப்பவர் என்பதாலையே தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மட்டுமின்றி அந்த நபரை பீட்சா தயாரிக்கும் இடத்தில் சிறை வைத்து, குளிரூட்டப்பட்ட அறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

5 மணி நேரம் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட அந்த இளைஞரை பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பெர்ன் குற்றவியல் அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே இரு தரப்பும் உண்மையில் நடந்த விவகாரத்தில் இருந்து விலகிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நான்கு துருக்கியர்களால் தாக்கப்பட்ட நபர், துருக்கி உளவு அமைப்பில் பணியாற்றுவதாகவும், சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் துருக்கியர்கள் தொடர்பில் அவர் வேவு பார்ப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே, அந்த நால்வரால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதான நால்வரில் முக்கிய குற்றவாளி என கருதப்படுபவர் பீட்சா கடை முன்னாள் உரிமையாளர் என கூறப்படுகிறது.

இவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்ட துருக்கி ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்