ஐந்து வயது சிறுமிக்கு பேருந்தில் அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த ஐந்து வயது சிறுமிக்கு பயணச்சீட்டு பரிசோதகர் அபராதம் விதித்த விவகாரம் சுவிட்சர்லாந்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த விடயத்தை மேலும் தொடராமல் இருக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Schaffhausen நகரில், தனது 10 வயது அக்காவுடன் பேருந்தில் பயணித்த அந்த சிறுமிக்கு, பயணச்சீட்டு பரிசோதகர் 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்திருந்தார்.

சுவிட்சர்லாந்தில் ஆறு வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியருக்கு பேருந்துப்பயணம் இலவசம்.

இந்நிலையில் அந்த ஐந்து வயது சிறுமிக்கு பயணச்சீட்டு பரிசோதகர் அபராதம் விதித்த விவகாரம் சுவிஸ் மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த பயணச்சீட்டு பரிசோதகர் செய்தது சரிதான், அவர் விதிகளுக்குட்பட்டே அபராதம் விதித்தார் என போக்குவரத்து நிர்வாகம் வாதிட்டது.

காரணம், ஆறு வயதுக்குட்பட்டோருக்கு பேருந்து பயணம் இலவசம் என்றாலும், அவர்களுடன் குறைந்த பட்சம் 12 வயதுடைய யாராவது பயணிக்க வேண்டும், இந்த சிறுமியைப் பொருத்தவரையில் அவளுடன் பயணித்த அவளது அக்காவின் வயது 10தான்.

எனவேதான் போக்குவரத்து நிர்வாகம் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக வாதிட்டது.

என்றாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பால் பின்வாங்கிய போக்குவரத்துத்துறை, தற்போது விதிகளை மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்