சுவிட்சர்லாந்தில் மிகவும் பிரபலமான பெயர் எது தெரியுமா? பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு மிகவும் பிரபலமான பெயர் எது என்ற தகவலை அரசு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த சுவிஸில் கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான ஆண் பிள்ளை பெயராக Liam தெரிவாகியுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 446 ஆண் பிள்ளைகளுக்கு Liam என்ற இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் அடுத்த வரிசையில் Noah (443) மற்றும் Leon (344) என்ற பெயர்கள் பிரபலமாகியுள்ளது.

சிறுமிகள் பெயர் வரிசையில் 504 முறை Emma என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் அடுத்த வரிசையில் Mia (445) மற்றும் Sofia (342) என்ற பெயர்கள் பிரபலமாகியுள்ளது.

இந்த பெயர்கள் ஜேர்மன் மொழி பேசும் சுவிஸ் பிரதேசங்களில் Noah என்ற பெயர் முதன்மை பெற்றுள்ளது.

சிறுமிகள் பெயரில் Mia முன்னிலை பெற்றுள்ளது. அதன் அடுத்த வரிசையில் Emma மற்றும் Lea என்ற பெயர்கள் பிரபலமாகியுள்ளது.

மேற்கு சுவிட்சர்லாந்தில் Liam என்ற பெயர் முதன்மை பெற்றுள்ளது. அதன் அடுத்த வரிசைகளில் Gabriel மற்றும் Arthur என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

சிறுமிகள் பெயர் வரிசையில் Emma முதன்மை பெற்றுள்ளது. இதன் அடுத்த வரிசையில் Alice மற்றும் Eva பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மொத்தம் 87,851 பிள்ளைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்