நான்கு வயது சிறுமியை தரையில் மோதியடித்த நபர் கைது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து ரயில் நிலையம் ஒன்றில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது நான்கு வயது மகளை தரையில் மோதியடித்த ஒரு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈராக்கைச் சேர்ந்த அந்த நபர், Brugg ரயில் நிலையத்தில், பலமுறை அந்த குழந்தையை தரையில் மோதியடித்ததில் அவளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அடிபட்ட அந்த சிறுமி இரத்த வாந்தியெடுத்ததோடு சுய நினைவிழந்துள்ளார்.

அருகிலுள்ளோர் அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க, பொலிசார் அந்த குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு முன்பாகவே சிறையில் அடைக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கோரியதையடுத்து அவர் காவலில் அடைக்கப்பட்டார்.

அவர் தனது மகளை பத்து நாட்களுக்கு சந்திக்க பொலிசார் தடை விதித்துள்ளனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்த நிலையில், தற்போது அந்த சிறுமி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்