மாயமான சுவிஸ் இளம்பெண்... சூரிச் கலை விழாவில் நடந்தது என்ன: தவிக்கும் குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சூரிச் கலை விழாவில் மாயமான இளம் பெண்ணை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் குடியிருந்து வந்தவர் 18 வயதான சப்ரினா. இவர் கடந்த ஞாயிறு அன்று சூரிச் கலை விழாவில் கலந்து கொள்ள ரயிலில் சென்றுள்ளார்.

தற்போது சப்ரினா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்ற நிலையில் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் பொலிசாரின் உதவியை நாடியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் இந்த தகவலை பதிவு செய்து உதவ கோரி வருகின்றனர்.

கலை விழாவுக்கு செல்லும் முன்பு சப்ரினாவுக்கும் அதே மண்டலத்தில் குடியிருக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையேயான உறவை முறித்துக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது அந்த சிறுவன், சப்ரினா முதலில் அவரது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் எனவும், அதன் பின்னர் தம்முடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஞாயிறன்று மாலை தமது முன்னாள் காதலரான அந்த 17 வயது நபரை தொடர்பு கொண்டு பேசியதாகவும்,

தாம் சூரிச் கலை விழாவுக்கு செல்ல இருப்பதாகவும், வேறு ஆண்களின் நட்பை தேடுவதாகவும் சப்ரினா தெரிவித்துள்ளார்.

அதே நாளில் மீண்டும் ஒருமுறை இருவரும் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். அதன் பின்னர் சப்ரினாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.

தமது மகள் மாயமானது தொடர்பில் பேசிய அவரது தந்தை, சப்ரினா இதுவரை ஒருபோதும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றதில்லை எனவும்,

எவ்வாறு அவரை தேடுவது என ஒன்றுமே புரியவில்லை என்று அவர் கண்கலங்கியுள்ளார்.

சப்ரினா சட்ட விதிகளின்படி சிறுமி அல்ல என்பதால், இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, சப்ரினா தொடர்பில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தேடுதலில் ஈடுபடுவது முன்னெடுக்கப்படும் விசாரணையை சீர்குலைக்கும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரியவந்த பின்னர் பொதுமக்களை ஒன்றிணைத்து தேடுதலில் களமிறங்கலாம் என பொலிசார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்