சுவிஸ் ராணுவத்தினர் தங்கியிருந்த சீயோன் முகாமில் 90 வீரர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிக்குள்ளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சீயோன் முகாமில் வியாழனன்று இரவு திடீரென்று சுமார் 90 ராணுவத்தினர் வயிற்றுப்போக்கு காரணமாக அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் அளவுக்கு தீவிரமல்ல எனவும், முகாமிலேயே முதலுதவி எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 90 ராணுவத்தினர் சுகவீனமடைய என்ன காரணம் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாத துவக்கத்தில் Jassbach முகாமில் சுமார் 50 ராணுவத்தினர் இதேபோன்று வயிற்றுப்போக்கு காரணமாக அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் நால்வர் கடும் அவதிக்கு உள்ளாகியதால் அவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், Bière முகாமிலும் ராணுவத்தினர் வயிற்றுப்போக்கால பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.