சுவிஸ் எல்லையில் தலை துண்டிக்கப்பட்ட நிர்வாண உடல் மீட்பு: இறுகும் விசாரணை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் மற்றும் பிரான்ஸ் எல்லையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்புரவு பணியாளர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலமானது சுவிஸ் நாட்டவர் எனவும், அவருக்கு சுமார் 81 வயது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

முழு நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் தலையும் கிடந்துள்ளது.

ஜெனீவா எல்லையில் உள்ள பிரான்ஸ் நகராட்சியான Ferney-Voltaire பகுதியில் இருந்தே புதனன்று சடலத்தை மீட்டுள்ளனர்.

கொலை செய்யப்படு சில நாட்களாகி இருக்கலாம் என கூறும் பொலிசார், சடலம் அழுகும் நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளதும், அதனின்று விடுபடவே மாயமானதாகவும்,

ஜூன் 2 ஆம் திகதி முதல் அவரை உறவினர்கள் தேடிவருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது பிரான்ஸ் அதிகாரிகளே விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரியவந்த நிலையில், சுவிஸ் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரியுள்ளனர்.

உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே, அவரின் மரண காரணம் என்ன என்பது தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்