சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மம்மிக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கும் என்ன தொடர்பு?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மம்மி ஒன்று பிரித்தானியாவின் புதிய பிரதமரின் மூதாதையர் என கண்டறியப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பேசலில் உள்ள தேவாலயம் ஒன்றின் கீழ் புதைக்கப்பட்டிருந்த, மம்மி என்று அழைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உடல், பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சனின் மூதாதையர் என கண்டறியப்பட்டுள்ளது.

1787இல் பேசலில் உள்ள Barfüsser தேவாலயத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த அந்த உடல் குறித்த மர்மம், நீண்ட காலத்திற்கு நிலவி வந்தது.

அந்த பெண் Barfüsser தேவாலயப் பெண் என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

ஆனால் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின், சுவிட்சர்லாந்திலேயே மிகச் சிறப்பாக பதப்படுத்தப்பட்டிருந்த அந்த உடல், Anna Catherina Bischoff என்பவருடையது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்தார்கள்.

Annaவின் உடலில் நிகழ்த்தப்பட்ட DNA சோதனைகள், அவர் பாதரச நச்சினால் உயிரிழந்ததைக் காட்டின.

அவரைக் கொல்வதற்காக கொடுக்கப்பட்ட அந்த பாதரசமே, அவரது உடல் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் காப்பதற்கும் உதவியுள்ளதும் தெரிய வந்தது.

அந்த நேரத்தில் Anna, சிபிலிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அதற்காகவே அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக பாதரசம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஒரு பாதிரியாரின் மகளான Anna, இறக்கும்போது அவருக்கு வயது 67. அவருக்கு ஏழு குழந்தைகள் இருந்திருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர்தான் போரிஸ் ஜான்சனின் குடும்ப உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

போரிஸ் ஜான்சன், பேசலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மம்மியின் ஆறாவது தலைமுறை பேரன் ஆவார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்