சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி காணப்படுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், EFTA நாடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் என அனைத்து பகுதிகளிலிருந்தும் சுவிட்சர்லாந்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டின், ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாதங்களில், 63,333 பேர் சுவிட்சர்லாந்தில் குடியமர்ந்ததாக புலம்பெயர்தலுக்கான மாகாண செயலகம் (SEM) நேற்று அறிவித்தது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 1.8% குறைவாகும்.

EU/EFTA நாடுகளிலிருந்து 44,321 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் (இது கடந்த ஆண்டைவிட 1.3% குறைவு), மூன்றாம் உலக நாடுகளிலிருந்து 19,012 பேர் புலம்பெயர்ந்து வந்துள்ளனர் (இது கடந்த ஆண்டைவிட 2.8% குறைவு).

அதே நேரத்தில் 35,832 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியுள்ளார்கள், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 3.9% குறைவு.

இறப்பு, குடியமர்தல் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டாலும் மொத்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 24,672 பேர்தான், இது கடந்த ஆண்டின் முதல் பாதியை ஒப்பிடும்போது 0.8% குறைவு.

SEM வெளியிட்டுள்ள கணக்கின்படி, ஜூன் மாத இறுதியில் 2.1 மில்லியன் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார்கள்.

இவர்களில் 323,384 பேர் இத்தாலியிலிருந்து வந்தவர்கள்,

308,532 பேர் ஜேர்மனியிலிருந்து வந்தவர்கள்,

265,501 பேர் போர்ச்சுகல்லிலிருந்து வந்தவர்கள்,

137,514 பேர் பிரான்சிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

சுவிட்சர்லாந்தின் மொத்த மக்கள்தொகை 8.4 மில்லியன் ஆகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்