சுவிட்சர்லாந்தின் மிகவும் ஆபத்தான இளைஞர் வெளிநாட்டில் கைது: வெளிவரும் பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் பிறந்து, பின்னர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து போராடி வந்த இளைஞர் ஒருவரை சிரியா கூட்டுப்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மிகவும் ஆபத்தான நபர் என பாராட்டப்பட்ட 24 வயது அபு இலியாஸ் அல் சுவிஸ்ரி என்ற டானியேல் என்பவரே கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்டர்போல் வெளியிட்டுள்ள தேடப்படும் பயங்கரவாதிகள் 173 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு சுவிஸ் நாட்டவர் இந்த டானியேல்.

கொடூரமான பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் இந்த டானியேல் என கூறப்படுகிறது. சமீப காலமாக இவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாத நிலையில்,

டானியேல் கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிஸ் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் நம்பியிருந்தனர்.

ஆனால் கடந்த மாதம் கிழக்கு சிரிய நகரமான அல்-பாகுஸ் அருகே அங்குள்ள அரசு படைகளால் டானியேல் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் ஆபத்தானவர் என்பதால் இவர் தொடர்பில் சிரியா ராணுவம் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளது. மட்டுமின்றி மூன்று மாத காலம் சிரியா ராணுவத்தின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவருடன் சிரியாவில் வைத்து திருமணம் செய்துகொண்ட இவரது மனைவி மற்றும் இவர்களது 11 மாத குழந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த டானியேல், கல்வியில் பின் தங்கிய நிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

அதன் பின்னர் ஜெனிவாவில் உள்ள Petit-Saconnex மசூதியில் வைத்து இவர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers