சுவிட்சர்லாந்தை உலுக்கிய சிறுவன் கொலை வழக்கில் அம்பலமான மர்ம பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 7 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் கைதான 75 வயது பெண்மணி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திவாலாகும் நிலையில் இருந்த அவர், அது தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து தப்பவே முன்பின் தெரியாத சிறுவனை கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் இலியாஸ் என்ற 7 வயது சிறுவன் தனியாக பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் வழியில் மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த சிறுவன் இலியாஸ், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் 75 வயது சுவிஸ் பெண்மணி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு உளவியல் கோளாறு தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க கோரப்பட்டது.

அதே வேளை அந்த பெண்மணி தொடர்பாக விசாரணை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

கடனில் தத்தளித்த குறித்த பெண்மணி, திவால் நடவடிக்கைகளில் இருந்து தப்பவே இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், திட்டமிட்டு சிறுவனை கொலை செய்ததாக அவர் மீது வழக்குப் ப்தியப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers