செலவை குறைக்க பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை: எதிர்ப்பும் ஆதரவும்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் நகராட்சி ஒன்று செலவுகளைக் குறைப்பதற்காக பள்ளிகளை சுத்தம் செய்யும் வேலையை மாணவர்களுக்கு கொடுத்ததையடுத்து அதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதைப் போலவே ஆதரவும் பெருகுகிறது.

சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் Prilly நகராட்சி, பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு செலவிடப்படும் சுமார் 15,000 ஃப்ராங்குகளை நிறுத்தியது.

அதனால் பள்ளிகளை மாணவர்களும் ஆசிரியர்களுமே சுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. கழிவறைகள், தரை போன்றவற்றை மட்டும் பணத்துக்கு வேலை செய்பவர்கள் சுத்தம் செய்தார்கள்.

ஆனால் மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு உருவானது.

அதே நேரத்தில் அதற்கு சிலர் ஆதரவும் தெரிவித்தார்கள். Prillyயின் மேயரும் முன்னாள் ஆசிரியருமான Alain Gillièron, வகுப்புகளை சுத்தம் செய்வது கல்விக்கும் உதவுவதாக கருதுகிறார்.

ஏனென்றால் மாணவர்களுக்கு வேலை கொடுப்பது உலகில் புதிதல்ல. ஜப்பானில் இது சர்வசாதாரணம், அங்கு பள்ளிகள் என்பவை கல்வி கற்பிப்பதற்காக மட்டும் அல்ல, மாணவர்கள் எப்படி சமுதாயத்தின் உறுப்பினர்களாக ஆவது என்பதற்கு பயிற்சியளிக்கும் ஒரு இடமும் என ஜப்பானியர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்காவிலும் சில பள்ளிகளில் இத்திட்டம் சோதனை முயற்சியாக செய்து பார்க்கப்பட்டது.

டென்னசியில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளியை சுத்தம் செய்வது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. தினமும் முதல் 10 நிமிடங்களுக்கு மாணவர்கள் பள்ளியை சுத்தம் செய்கிறார்கள்.

நாம் மாணவர்களுக்கு வாழ்க்கை பயிற்சி கொடுக்கிறோம் என்று கூறும் அந்த பள்ளியின் தகவல் தொடர்புக்கான இயக்குநரான Susan Shafer, நாளை கல்லூரிக்கு செல்லப்போகும் அவர்களது தங்கும் அறையை யாரும் சுத்தம் செய்யப்போவதில்லை என்கிறார்.

மற்றொருவர், இவர்கள் வெறுமனே வகுப்பறைகளை சுத்தம் செய்வதில்லை, அவர்கள் ஒவ்வொரு மாணவனின் நடத்தையையும் உருவாக்குகிறார்கள் என்கிறார்.

அத்துடன் வகுப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்களைக் கொண்ட பள்ளிகள், பள்ளியின் பொருட்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers