வெளிநாட்டில் கொலை வழக்கில் சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்றம் அளித்த கடுமையான தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

மொரோக்கோ நாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சுவிஸ் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட குறித்த நபர், அந்த குழுவில் இளைஞர்களை இணைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளார்.

இருப்பினும் தாம் நிரபராதி என விசாரணை காலகட்டத்தில் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தற்போது அளிக்கப்பட்டுள்ள 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த நபருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுவிஸ் இளைஞர் தொடர்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் எதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே வழக்கு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம், சுவிஸ் இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தீவிரவாத குழுக்களில் இணைந்து செயல்பட்டது, தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செய்லபட்டது, குற்றவியல் நடவடிக்கை தொடர்பான தகவல்களை மறைத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவர் மட்டுமின்றி, மேலும் மூன்று இளைஞர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டென்மார்க் மாணவி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரை கும்பல் ஒன்று கடத்தி, அவர்களின் தலையை துண்டித்து கொலை செய்தது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் பலரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை மூவருக்கு மரண தண்டனையும் இருவருக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers