சீன உளவாளியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க சுவிட்சர்லாந்து முடிவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மருந்து தயாரிப்பு துறையில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் சீன நாட்டவர் ஒருவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் வசித்து வரும், 50 வயது மதிக்கத்தக்க Gongda Xue, கடந்த ஆண்டு GlaxoSmithKline (GSK) நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட உயிர் வேதியியலாளரான Yu Xue என்பவரின் சகோதரர் ஆவார்.

சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அலுவலகம், பெனிசில்வேனியா மாகாண நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மே மாதம் 28ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சியாளரான Gongda Xueவை, அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் Yu Xue, GSKயிலிருந்து வர்த்தக ரகசியங்களை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அவை புற்றுநோய் மற்றும் பிற பயங்கர நோய்களுக்கான சிகிச்சை தொடர்பான தகவல்களாகும்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஐந்துபேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் Renopharma என்ற நிறுவனத்தை புதிதாக தொடங்கியவர்கள்.

அவர்கள் GSKயிலிருந்து திருடிய தகவல்களை வைத்து பலனடைய முயற்சி செய்தவர்கள். பிலதெல்பியா அதிகாரிகள், GSKவில் 2006 முதல் 2016வரை பணியாற்றிய Yu Xueவை உலகின் தலைசிறந்த புரத உயிர் வேதியியலாளர்களில் ஒருவர் என வர்ணித்துள்ளார்கள்.

பேசலில் Friedrich Miescher Institute for Biomedical Researchஎன்ற நிறுவனத்திற்காக பணியாற்றிய Gongda Xue, GSKயில் திருடிய தகவல்களை வைத்து சுவிட்சர்லாந்தில் பரிசோதனைகள் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அந்த சுவிஸ் நிறுவனத்துக்கான செய்தி தொடர்பாளரான Isabelle Baumann, Gongda Xue அங்கு 2008 முதல் 2014 வரை பணியாற்றியதாக தெரிவிக்கிறார்.

இது பொருளாதார யுத்தத்திற்கு ஒரு உதாரணம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க நீதித்துறை, சீனாவின் Nankinஇலுள்ள Renopharma நிறுவனத்திற்கு சீன அரசே நிதியுதவி அளித்து வருவதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...