தவறான இடத்தில் சாகஸம் செய்து சொதப்பிய சுவிஸ் விமானப்படை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பேஸலில் விமானப்படையின் சாகஸ நிகழ்ச்சி ஒன்றைக் காண ஆசையாக மக்கள் கூடியிருக்க, விமானப்படையோ தவறான இடத்தில் சாகஸம் செய்து சொதப்பியது.

சுவிஸ் விமானப்படை ஒன்றின் விமானங்கள் தாங்கள் பறக்க வேண்டிய இடத்திற்கு பதிலாக ஆறு கிலோமீற்றர்கள் தொலைவில் நடந்து கொண்டிருந்த வேறொரு நிகழ்ச்சிக்காக மக்கள் கூடியிருந்த இடத்தின் மீது பறந்தன.

பேஸலில் Oskar Bider என்னும் விமானப்படை வீரரை நினைவு கூறும் நிகழ்ச்சி ஒன்றிற்காக மக்கள் கூடியிருந்த நிலையில், அந்த இடத்தின் மீது அந்த வீரரை கவுரவிக்கும் வகையில் விமானப்படை விமானக்கள் பறக்க வேண்டும்.

ஆனால் விமானங்கள் அந்த நிகழ்ச்சிக்காக மக்கள் கூடியிருந்த இடத்திற்கு மேல் பறப்பதற்கு பதில், Mümliswil என்னும் இடத்தில் yodelling festival என்னும் விழாவுக்காக மக்கள் கூடியிருந்த மக்களுக்கு மேலாக பறந்தன.

ஒரு பெரிய வெள்ளை கூடாரத்துடன், அங்கு ஒரு ஹெலிகொப்டரும் நிற்கவே, விமானப்படையின் சாகஸக் குழுவின் தலைவர் அந்த இடம்தான் தங்களுக்கு குறிப்பிடப்பட்ட இடம் என தவறாக நினைத்து அதன்மீது பறந்ததாக ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அந்த விமானங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் GPS வசதி கொண்டவை அல்ல, அவை 40 ஆண்டுகள் பழமையானவை.

ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டு, மக்கள் கூட்டமாக நிற்பதை கண்ணால் பார்த்துதான் விமானி முடிவு செய்ய வேண்டும், எனவேதான் தவறு நிகழ்ந்து விட்டது என்றார் அவர்.

அந்த சாகஸ நிகழ்ச்சியின் தலைவர் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்