காருக்குள் புகைப்பிடிக்க ஆசைப்பட்ட சுவிஸ் நபர்: இறுதியில் நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் பூட்டிய காருக்குள் இருந்து புகை பிடிக்க முயன்ற நபரால், மொத்த காருமே நெருப்புக்கு இரையான சம்பவம் நடந்தேறியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்ட அந்த நபரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

பாஸல் மண்டலத்தின் Liestal நகரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. ஞாயிறு மாலை சுமார் 7.30 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு குழுவினர் சம்பவயிடத்தில் தீப்பற்றி எரியும் கார் ஒன்றை கண்டுள்ளனர்.

அதன் அருகாமையில் தீக்காயங்களுடன் 60 வயது முதியவரும் இருந்துள்ளார். அவருக்கு முதலுதவி வழங்கிய மீட்பு குழுவினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நெருப்பை கட்டுப்படுத்தினாலும், அந்த கார் மொத்தமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த 60 வயது நபர் பூட்டிய காருக்குள் இருந்து புகை பிடிக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இருப்பினும் உரிய ஆய்வுக்கு பின்னரே உறுதியான காரணம் என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...