சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலைக்கு உதவியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உளவியல் பாதிப்புக்கு உள்ளான பெண்மணியை கருணைக் கொலைக்கு உதவியதாக கூறி மருத்துவர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கருணைக் கொலைக்கு உதவும் மையம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார் மருத்துவரான Erika Preisig.

இவருக்கே தற்போது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் நாளுக்கு 100 பிராங்குகள் என 100 நாட்கள் அபராதமும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், உளவியல் பாதிப்புக்கு உள்ளான 66 வயது பெண்மணிக்கு மருத்துவர் எரிகா ப்ரீசிக் கருணைக் கொலைக்கு உதவியுள்ளார்.

அந்த 66 வயது பெண்மணி மருத்துவர் எரிகாவை சந்திக்கும் முன்னர் சுமார் 300 கருணைக் கொலைக்கு உதவும் மருத்துவர்களை நாடியுள்ளார்.

ஆனால் அவரது நிலையை கருத்தில் கொண்டு அந்த 300 மருத்துவர்களும் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே அவர் மருத்துவர் எரிகாவை சந்தித்து தமது நிலையை விளக்கியுள்ளார். தொடர்ந்து அவரது கோரிக்கையை ஏற்று மருத்துவர் எரிகா அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, மருத்துவர் எரிகா மீது வழக்குப் பதியப்படு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதில், மருத்துவர் எரிகா அந்த 66 வயது பெண்மணியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...