ஜூலை 1ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் அதிர்ஷ்டத்தை நம்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அதிர்ஷ்டத்தை நம்பி சூதாட்டம் ஆடுபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி.

ஆம், ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் வெளிநாட்டு சூதாட்ட இணைய தளங்களுக்கு சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட உள்ளது.

அடுத்த வாரத்தில் ஐரோப்பாவிலேயே கடுமையான சூதாட்ட விதிகளை சுவிட்சர்லாந்து அறிமுகம் செய்ய உள்ளது.

இதனால் அடுத்த வாரத்திலிருந்து வெளிநாட்டு சூதாட்ட இணையதளங்கள் முடக்கப்பட உள்ளன.

அத்துடன், சூதாட்டம், லொட்டரி மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றிற்கு பொறுப்பான பெடரல் கமிஷன் ஜூலை மாதம் 1ஆம் திகதியிலிருந்து எந்தெந்த இணையதளங்கள் தடை செய்யப்பட உள்ளன என்பதைக் காட்டும் கருப்புப் பட்டியல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் சுவிட்சர்லாந்திலுள்ள கேசினோக்கள் மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி தொடர்கிறது.

சுவிட்சர்லாந்தில் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ள சுமார் 75,000 குடிமக்களின் நலன் கருதியும், ஆண்டுதோறும் சுமார் 250 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சூதாட்டம் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுப்பதற்காகவும் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers