நடுவானில் இடியில் சிக்கிய பயணிகள் விமானம்.. கதறி அழுத பயணிகள்: வெளியான வீடியோ

Report Print Basu in சுவிற்சர்லாந்து

கொசோவோவில் இருந்து சுவிட்சர்லாந்து பயணித்த பயணிகள் விமானம் இடியில் சிக்கி பயங்கரமாக அந்தரத்தில் குழுங்கிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த யூன் 16ம் திகதி ஏஎல்கே ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், பிரிஸ்டினா, கொசோவோயில் இருந்து சுவிட்சர்லாந்தின் பாசல் நகரத்திற்கு பயணித்துள்ளது.

விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென இடி ஏற்பட்டதால் விமானம் அந்தரத்தில் பயங்கரமாக குழுங்கியுள்ளது. இதன் போது விமான குழு பெண் ஒருவர் விமான தளத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டார். மேலும், விமானத்திலிருந்த பொருட்கள், சூடு தண்ணீர் பயணிகள் மேலே விழுந்துள்ளது.

இதனால், பயத்தில் பயணிகள் கதறியுள்ளனர். பலர் பிராத்தனை செய்துள்ளனர். விமானம் தரையிறங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, விமானம் உடனடியாக பாசல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக வெளியேற அவசர பணியாளர்கள் உதவியுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்