கணவர் வெளிநாட்டில்... குடியிருப்பில் தனியாக இருந்த மனைவிக்கு முன்னாள் காதலனால் நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பில் தனியாக இருந்த இளம் தாயாரை, அவரது முன்னாள் காதலர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

பெர்ன் மண்டலத்தின் பெர்னீஸ் ஜூரா பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது.

கென்ய நாட்டவரான 30 வயது இளம் தாயார் சம்பவத்தன்று Reconvilier பகுதியில் உள்ள தங்களது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார்.

மட்டுமின்றி அப்போது அவரது கணவரும் தனிப்பட்ட வேலை நிமித்தம் கென்யா சென்றுள்ளார். இந்த நிலையிலேயே இவருக்கு நெருக்கமான அந்த அமெரிக்க நாட்டவர், பெண்மணியின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த அமெரிக்க இளைஞர் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் அந்த பெண்மணி சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாரிடம், அந்த அமெரிக்க நாட்டவர் மறுப்பேதும் தெரிவிக்காமல் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த நபர் மீதும் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை செவ்வாய் அன்று துவங்கியுள்ளது.

கொலை குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் கென்யாவில் இருந்து 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் அவர் அமெரிக்க கடற்படையில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். கொல்லப்பட்ட பெண்மணி பெர்ன் மண்டலத்தின் Reconvilier பகுதியில் நீண்ட காலமாக குடியிருந்துவருவதை அந்த கடற்படை அதிகாரி அறிந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் அவர் அமெரிக்காவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் அவர் கொலை செய்யும் நோக்கத்துடன் சுவிஸ் வந்தாரா, அல்லது வேறு திட்டம் இருந்ததா என்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொல்லப்பட்ட பெண்மணி 1984 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிரபல தடகள வீரரான Julius Korir என்பவரின் மகள் என தெரியவந்துள்ளது.

தமது மகளை ஏன் அவர் கொல்ல வேண்டும் என்பது தொடர்பில் தமக்கு உண்மை தெரிய வேண்டும் என ஜூலியஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்