ராணுவ பயிற்சிக்கு பின் பெண்ணாக மாறிய வீரர்: சுவிட்சர்லாந்தில் அவர் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ராணுவ பயிற்சிக்குப்பின் பெண்ணாக மாறிவிட்டார் ஒரு ராணுவ வீரர்.

Claudia Sabine Meier என்னும் அந்த ரணுவ வீரர் அமைதிப்படை ஒன்றில் இணைந்து கொள்ளக் கோரி விண்ணப்பித்திருந்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்திருந்ததால், அவர் ராணுவத்தில் பணியாற்ற தகுதியற்றவர் என்று கூறிவிட்டார்கள்.

ராணுவம் என்பது பாலினம் கொண்டதல்ல, அதாவது ஆணோ பெண்ணோ அல்ல என வாதிட்ட அவரது வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

தற்போது ராணுவம் மூன்றாம் பாலினத்தவரையும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே வருங்காலத்தில் சுவிஸ் ராணுவத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பப்படிவத்தில் நீங்கள் ஆணா, பெண்ணா அல்லது மூன்றாம் பாலினத்தவரா என்ற கேள்வியும் இடம்பெற உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்