இந்திய பாம்பாட்டிகளின் மகுடி இசை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்: சுவிஸ் ஆய்வு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இந்திய பாம்பாட்டிகள் பயன்படுத்தும் மகுடியின் இசை, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்திலும், பிரித்தானியாவிலும் சுமார் ஒரு சதவிகிதம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கின்றன, அதாவது கர்ப்பகாலத்தின் 32ஆவது வாரத்திற்கு முன்பே.

இப்படி குறை பிரசவத்தில் பிறந்தாலும், மருத்துவ உலகின் கண்டுபிடிப்புகளால் பெரும்பாலான குழந்தைகள் பிழைத்துக் கொள்கின்றன.

என்றாலும், பின்னாட்களில் அவற்றில் பாதிக் குழந்தைகள் கற்றல் மற்றும் கவனக் குறைபாடு மற்றும் நரம்புமண்டல மனோவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றன.

தாயின் வயிற்றுக்குள் அமைதியாக வாழும் குழந்தைகள் குறை பிரசவத்தால் சீக்கிரம் பிறந்து விடுவதால் மருத்துவமனையின் அலாரம் மற்றும் பிற ஒலிகளால் மன அழுத்தத்திற்குள்ளாவதால் இந்த பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஜெனீவா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவை இணைந்து, இந்த பிரச்சினையை இசையால் தீர்க்க முடியுமா என பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் உதவியுடன் ஆராய்ச்சி ஒன்றில் இறங்கினர்.

பிரபல இசை ஜாம்பவான் Mozartஇன் இசை குழந்தைகளின் மூளை செயல்பாட்டை தூண்ட வல்லது என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் என்பதால் அவரது இசையையே இசைத்து பார்ப்பது என முடிவாயிற்று.

ஒவ்வொரு இசைக்கருவிகளாக முயற்சி செய்து பார்த்ததில், ஆச்சரியத்திற்குரிய விதமாக, இந்திய பாம்பாட்டிகள் பயன்படுத்தும் மகுடியின் இசை மிகவும் பயனுள்ளதாக இருந்தது தெரியவந்தது.

மிகவும் மன உளைச்சலில் இருந்த குழந்தைகள் கூட உடனடியாக அமைதியாகி அந்த மகுடி இசையை கவனிக்க ஆரம்பித்தன.

அந்த குழந்தைகளின் மூளையை MRI ஸ்கேன் செய்து பார்த்தபோது, மகுடி இசையை கேட்ட குழந்தைகளின் மூளையின் செயல்பாடு, இசையை கேட்காத குழந்தைகளின் மூளையின் செயல்பாட்டை விட நன்கு முன்னேறியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அவ்வாறு சோதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்போது ஆறு வயதாகும் நிலையில், மீண்டும் அவர்களை சந்தித்து அவர்கள் குழந்தையாக இருந்தபோது ஏற்பட்ட முன்னேற்றங்கள் இன்னமும் காணப்படுகின்றனவா என ஆராய்ச்சியாளர்கள் ஆராய உள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers