ஓடும் ரயிலில் 40 ஆண்களால் துஸ்பிரயோகத்திற்கு இரையான சுவிஸ் பெண்மணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

லூசெர்ன் செல்லும் ரயில் ஒன்றில் 40 ஆண்களால் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை சுவிஸ் பெண்மணி ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

Schwyz பகுதியில் இருந்து லூசெர்ன் செல்லும் ரயில் ஒன்றில் குறித்த 37 வயது பெண்மணி சம்பவத்தன்று பயணம் செய்துள்ளார்.

அவர் இருந்த பெட்டியில் பயணிகள் எவரும் இல்லை என்பதால், தாமிடமிருந்த புத்தகம் ஒன்றை வாசித்தபடி பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் Arth-Goldau பகுதியில் வைத்து 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெட்டியில் ஏறியுள்ளது.

பெண் ஒருவர் தனியாக பயணமாவதை கவனித்த அந்த கும்பல், அவரின் அருகாமையில் வந்து கிண்டலும் கேலியுமாக கும்மாளமிட்டுள்ளது.

நடப்பது எதையும் கவனத்தில் கொள்ளாமல் இருந்த அந்த பெண்மணியை அந்த ஆண்கள் கும்பல் வம்புக்கு இழுத்துள்ளது.

மேலும், சத்தமிட்டு ஆபாசமாக பேசியுள்ளனர். ஒருகட்டத்தில் அந்த பெட்டியில் இருந்து வேறு பகுதிக்கு செல்லலாம் என எண்ணியதாகவும்,

ஆனால் தாம் அந்த ரயிலின் முன்பகுதியில் இருப்பதால் வேறு பகுதிக்கு செல்வது கடினமானது என்பதால் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பவை அனைத்தையும் கண்டும் காணாமலும் அவர் அதில் பயணம் செய்துள்ளார். எவரும் தமது உடம்பில் கை வைக்கவில்லை என்றாலும், தனித்து பயணப்படும் ஒரு பெண்ணிடம் இவ்வாறாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் அல்லது பலாத்கார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகம் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்