தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும் Bubble Bees என்னும் கல்விக் குழுமம்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.

மணல்வாரி அல்லது மண்ணன் என்னும் measles மற்றும் கக்குவான் இருமல் என்னும் whooping cough ஆகிய நோய்களுக்கெதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிள்ளைகள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்களா என்பது தொடர்பாக பெற்றோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நோய்களுக்கும் எதிராக தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்த மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அப்படி ஆதாரத்தை சமர்ப்பிக்காத பெற்றோருக்கு, குழந்தைகள் மருத்துவர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஆலோசனை கூறுவார்.

இந்த முயற்சியும் வெற்றிபெறாத பட்சத்தில் அந்த குழந்தையின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

அதேபோல் Bubble Bees நிறுவன ஊழியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

2019ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 200 பேருக்கு மண்ணன் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்